கணியூர் பேரூராட்சி அதிரடி நடவடிக்கை-

69பார்த்தது
கணியூர் பேரூராட்சி அதிரடி நடவடிக்கை-
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் காரத்தொழுவு சாலையில், சாக்கடை நீர் சாலை ஓரத்தில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதிகாரிகளும் ஆய்வு செய்து சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனை அடுத்து கணியூர் பேரூராட்சி சார்பில் சாக்கடை நீர் வெளியேறுவதற்க்கு ஏதுவாக, அப்பகுதியில் இருந்த நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரடியாக தூய்மை பணியாளர்களுடன் களமிறங்கி சாக்கடை நீர் அப்புறப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியிலும் தேங்கிய சாக்கடை நீரும், அப்பகுதியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படும்.

தொடர்புடைய செய்தி