திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி, நகராட்சி பூங்கா வாரச்சந்தையில் உள்ள கடைகள் கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராஜ், மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் பாலச்சந்தர் ஆகியோர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நகராட்சி தலைவர், ஆணையாளர், பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.