திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனிக்கு மடத்துக்குளம் கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில் கொழுமம் வழித்தடத்தில் குமரலிங்கம் பகுதி பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டும் இருப்பதால் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இங்கு நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.