திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களும் குடிநீர் திறந்துவிடும் பணியாளர்களும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குடிநீர் குழாய் திறந்துவிடும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை தெரிந்துகொண்ட தொழிலாளிகள் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கேள்வி கேட்டால் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையாக வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றனர். சட்டம் என்ன சொல்கின்றதோ அதன் படி குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ. 638 வழங்கிட வேண்டும். ஆனால் இங்கு வழங்குவது ரூ. 507 மட்டுமே என தெரிவித்தனர். ஒரு அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பதும், சட்டத்தை மதிக்காமல் இருப்பதும், போனஸ் போன்ற உரிமையை மறுப்பது சரியில்லை என்றனர். மேலும் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பணியாளர்களுக்கு தீபாவளி போனசை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.