அதிமுக காங்கேயம் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்
அதிமுக காங்கேயம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள என். எஸ். என். திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காங்கேயம் ஒன்றிய செயலாளர் என். எஸ். என் நடராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தாமோதரன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் எம். எல். ஏ: - ஒவ்வொரு தொண்டனும் கட்சியின் வெற்றி குறித்து யோசிக்க வேண்டும். அதன்படி செயலாற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால் நமது கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வந்தால் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வார் என்றார். மேலும் அவிநாசி அத்திக்கடவு திட்டம் 2, பாண்டியாரு புண்ணம்புலா திட்டம், ஆனைமலை ஆறு- நல்ல ஆறு ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவார். எனவே அதிமுக வெற்றி அடைய நாம் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கே. ஜி. கே. கிஷோர்குமார், அம்மா பேரவை துணைச் செயலாளர் அப்பு@ பழனிச்சாமி, ஒன்றிய அவை தலைவர் மைனர் டி பழனிச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் திருச்செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரசேகர், பாலசுப்பிரமணி, செல்வராஜ், துரைசாமி மற்றும் நிர்வாகிகள் இப்பட 1000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.