காவல் நிலையம் முன்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

55பார்த்தது
காவல் நிலையம் முன்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
காங்கேயம் காவல் நிலையம் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் - விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்த கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் காங்கேயம் காவல் நிலையம்‌ அருகில் ரவுண்டானா சிக்னல் உள்ளது. இந்த ரவுண்டானா அருகே காங்கேயம் சட்டமன்ற அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளது. இவை குறுகிய சாலை என்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காரணத்தினால் விபத்து மற்றும் போக்குவரத்து கட்டுபாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் தாராபுரம்-காங்கேயம் சாலையில் வரும் வாகனங்கள் காங்கேயம் ரவுண்டானா பகுதியில் போடப்படும் சிக்னல் காரணமாக காங்கேயம் காவல் நிலையத்தின் முன்பே நிறுத்தப்படுவதும், குறுகிய இடத்திற்குள் காவல் நிலையத்தை கடந்தும் செல்கிறது. இந்த நிலையில் அந்த குறுகிய சாலையின் இரு ஓரங்களிலும் வாகனங்கள் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் நிறுத்துவதை அப்புறப்படுத்த வேண்டும், இதனால் பொதுமக்கள் அந்த இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி கொள்வர் எனவும், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி