கஞ்சா திமுக உதவியுடன் விற்பனை வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

51பார்த்தது
காங்கேயம் வழியாக கருத்தரங்கிற்கு பல்லடம் செல்லும்  பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா  சரவணன் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய வானதி சீனிவாசன் பல்வேறு தலைவர்கள் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கும் அமைச்சராக உள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொகுதியில் காங்கேயம் காளைக்கு சிலை அமைக்காமல் இருப்பது வருந்தத்தக்க  விஷயமாக  பார்க்கின்றோம். காங்கேயம் காளை சிலை அமைக்க பாஜக குரல் கொடுப்போம் என்றார். காங்கேயம் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப் படுவதாகவும் அதில் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் இடத்தில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.  வரவேற்பு கொடுக்கும் நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் யோகிஸ்வரன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், கலா நடராஜன், மாவட்டபொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சாய் பூர்ணிமா, விஜயகுமார், காங்கேயம் ஒன்றிய தலைவர்கள் செந்தில்குமார், குருதேவராஜ், நகரதலைவர் சிவபிரகாஷ், வெள்ளகோவில் ஒன்றியதலைவர்கள் அண்ணாமலையார் ராஜ்குமார், கருணாமூர்த்தி, நகரதலைவர் ஆதித்யாசெந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி