பள்ளி வாகன ஓட்டுனருக்கு மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனராக காங்கேயத்தைச் சேர்ந்தவர் சேலமலையப்பன். இவர் நேற்றுமுன்தினம் தனியார் பள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி வளாகத்தில் இருந்து பேருந்து ஒட்டிச்செல்லும் போது பாதி வழியில் திடீரென செமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் தனது வாகனத்தில் உள்ள 20 குழந்தைகளின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை விபத்து ஏற்படாமல் சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. ஓட்டுநர் வாகனம் ஓட்டுபோதே உயிர் பிரிந்த புகை படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணமாக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவர்களின் தலைமையில் இறந்த சேமலையப்பன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.  

பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஜெயந்தி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் இறந்த சேமலையப்பன் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மாலையணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி