வைகாசி விசாகம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை

79பார்த்தது
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலம் ஆகும். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு உத்திரவு பெட்டி இங்கு உள்ளது. பக்தர்களின் கனவில் முருகனே தோன்றி இந்த பொருளை சிவன்மலை முருகன் கோவிலில் வைத்து பூஜைக்கு வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெட்டிக்குள் என்ன பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறது அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர் மறையவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது ஐதீகம். மேலும் முருகப்பெருமான் பிறந்த விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று வைகாசி விசாகத் திருவிழா உலகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் வெகு விமர்சியாக விசாக திருவிழா  கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பேற்பட்ட இந்த சன்னதியில் இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள், தேன், பன்னீர், சந்தானம், திருநீறு, பல வகைகள்  உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாகரனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அரோகரா கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையும், கோவில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி