கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

79பார்த்தது
காங்கேயம் அருகே நிழலில் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளகாளிபாளையம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்த மக்கள் குடியிருந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரியிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல மனுக்கள் கொடுத்து போராடி வந்த நிலையில் கடந்த 08. 03. 2024 அன்று 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இலவச பட்டா வழங்கியது. இலவச பட்டா வழங்கி 5  மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடத்தில் நேற்று இடம் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்த நிலையில் தற்போது கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.  இடம் ஒதுக்கிய நிலையில் அங்கு பொதுமக்கள் விரும்பாத நிலையில் அந்த  இடத்தில் வீடு கட்ட நிதி ஒதுக்கியதாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி