போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது ஊதியூர் வழக்கு பதிவு

61பார்த்தது
காங்கேயத்தில் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து விதிமீறலின் கீழ் தினசரி அளவில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்குகள்‌ பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று காங்கேயம் அடுத்த ஊதியூரில் தாராபுரம்-காங்கேயம் சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.  இதில் குடிபோதையில் வண்டி ஓட்டியது,  அதிவேகமாக சென்றது,  தலைகவசம் அணியத் தவறியது,  ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம்‌ ஓட்டியது போன்ற 20 பிரிவுகளின் கடந்த மாதம் சுமார் 500 வழக்குகள் போடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஊதியூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை தாராபுரம் காங்கேயம் சாலையில் குள்ளம்பாளையம் அருகே ஊதியூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களின் மீது 15 வழக்குகள்‌ பதியப்பட்டது.  மேலும் தினசரி அளவில் இது போன்று ஊதியூர் சுற்றுப் பகுதியிலுள்ள தாராபுரம் சாலை,  காங்கேயம் சாலை,  குள்ளம்பாளையம்,  கொடுவாய் சாலை அனைத்து இடங்களிலும் போக்குவரத்து விதிமீறல் கீழ் வாகனம் ஓட்டுபவர்களை வாகன சோதனையில் போலிசார் பிடித்து வருகின்றனர்.  இதனால் ஊதியூர் பகுதிகளில் வாகன விபத்துகள்,  திருட்டுகள் போன்ற குற்றங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி