காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் ஆலங்காட்டு பகுதியில் உள்ள முக்கரையான் காட்டில் கிணத்து மேட்டில் அமர்ந்து செல்வராஜ் என்பவர் மது அருந்தி கொண்டு இருந்ததாகவும் பின்னர் காலை வரை வீடு வரவில்லை என்று சந்தேகப்பட்டு வழக்கமாக அவர் மது அருந்தும் முக்கரையான் காட்டில் கிணத்து மேட்டுக்கு சென்று பார்த்தபோது செல்வராஜ் அவரின் வாகனம் நிறுத்தப்பட்டு செல்போன் அதே இடத்தில் இருந்ததாகவும் கிணத்து மேட்டை சுற்றியுள்ள பகுதியில் தேடிப் பார்த்தும் எங்கும் அவர் இல்லை என்று சந்தேகித்து பின்னர் காங்கேயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடிய போது செல்வராஜ் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.