காங்கேயம்: சிறுமி பாலியல் வன்கொடுமை - உறவினர் போக்சோவில் கைது

1589பார்த்தது
காங்கேயம்: சிறுமி பாலியல் வன்கொடுமை - உறவினர் போக்சோவில் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தாராபுரம் சாலையில் வசித்து வருபவர் தினேஷ். இவர் காங்கேயத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தினேஷ் வீட்டில் தங்கிருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவினர் பெண்ணின் மகளான 15 வயதுடைய சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகித்த சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.  இந்த நிலையில் அந்த சிறுமி காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ‌ இதன் அடிப்படையில் தினேஷை காங்கேயம் மகளிர் போலிசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி