காங்கேயத்தில் கார் வேன் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

64பார்த்தது
காங்கேயம் வீரணம்பாளையம் பகவதிபாளையத்தில் மதுபான கிடங்கு உள்ளது. மதுபான கிடங்கில் இருந்து வேன் வாகனம் மூலமாக ஓட்டுநர் மற்றும் 3 உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை இறக்குவதற்கு வந்த வேன் வீரணம் பாளையம் அருகே வந்த போது எதிரே ஊத்துக்குளியில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.  மதுபான பாட்டில்கள் சாலையில் சிதறியது.  இதில் பல பாட்டில்கள் உடைந்தது.  மேலும் காரில் வந்த 2பேர் காரின்  இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.  பின்னர் காவல்துறை  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் மாட்டிக்கொண்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரை ஓட்டி வந்த நசீம் உயிரிழந்தார். முகமது பர்மா படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கும் ,  வேன் ஓட்டுநர் சோமு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.  மதுபானங்களைஏற்றி வந்த வேனில் வந்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.  ரூ 38 லட்சம் மது பாட்டில்களை ஏற்றி வந்த நிலையில் தற்போது உடைந்த பாட்டில்களின் மதிப்புசுமார் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் மதிப்பை தெரிவிக்க மறுக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி