காங்கேயம் வெள்ளகோவில் பகுதியில் நேற்று இரவு திடீரெனெ குளிர் காற்று வீசியதுடன் பரவலாக மழை பொழிந்தது. காங்கேயத்தில் 32. 6 மில்லிமீட்டர், வெள்ளகோவிலில் 3. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காங்கேயம் கடைவீதி, கரூர் சாலை, திருப்பூர் ரோடு, பழையகோட்டை சாலை, சென்னிமலை சாலை, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 9. 30 மணியளவில் திடீரெனெ மழை பொழிந்தது. இதனால் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பின்னர் நின்ற மழையானது இரவு 11 மணியளவில் அதிக காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. இதே போல் வெள்ளகோவில் பகுதிகளிலும் இரவு நேரத்தில் சிறிது நேரம் மழை பொழிந்து உள்ளது. காங்கேயம் 32. 6 மில்லி மீட்டரும், வெள்ளகோவில் 3. 6மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.