காங்கேயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பறங்குன்றம் மலையில் ஆடுகளை வெட்டி பலியிட முயன்றவர்களை கண்டித்து நேற்று 4ம் தேதி திருப்பறங்குன்றத்தில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு செல்ல ஆயத்தமாகி வந்த நிலையில் அங்கு 144தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. போலீசார் மற்றும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தாராபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். காங்கேயத்திலிருந்து இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் தாராபுரம் செல்ல ஆயத்தமான தகவலறிந்த காங்கேயம் போலீசார் திருப்பூர் ரோட்டில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு சென்று சதீஷ்குமார் உள்ளிட்ட இந்து முன்னணியினரை கைது செய்து சென்னிமலை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.