காங்கயத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

60பார்த்தது
காங்கேயத்தில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியானது காங்கேயம் காவல் நிலையம் முன்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காங்கேயம் ரவுண்டானா, அரசு மருத்துவமனை வழியாக சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் இரண்டு கல்லூரியிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியானது போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி சென்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இதை தடுப்பதற்கு ஒரே வழி மாணவ மாணவியர்களின் சக்தி ஒன்றே தான் என காவல் ஆய்வாளர் அனந்தநாயகி மாணவ மாணவியர்கள் இடையே தெரிவித்தார். இந்த நிகழ்வில் காங்கேயம் உதவி ஆய்வாளர் அர்ச்சுனன் காங்கேயம் காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி