காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் சுமார் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு காங்கயம் வட்ட தலைவர் உஷாராணி தலைமை தாங்கினார்.
நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், நிலை வருவாய் அலுவலர் மற்றும் இடை வருவாய் அலுவலர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உடனே நிரப்பிட வேண்டும் வருவாய் மற்றும் பெரிதாக பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கிடாகிவிட்டது உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இக்கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயில் காத்திருப்பு போராட்டமாக 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடத்தினர்.