காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ 5 1/2 கோடியில் புதிய தார் சாலை பணிகள் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 5. 67 கோடியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கோ. மலர்விழி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து தார்சாலைப் பணி களை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசும் போது, முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மேலும் நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய திட்டப்பணிகள் அனைத்தும் விரைவாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இன்றைய தினம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியாண் டிபாளையத்தில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், முன்னாள் வீரணம்பாளையம் தலைவர் உமாநாயகி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், கட்சி நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்