சிவன்மலை பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கும் பணி

53பார்த்தது
சிவன்மலை பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கும் பணி
காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 400 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் சிவன்மலை பிரசித்தி பெற்ற சுப்ரமணியன் சுவாமி கோவில் உள்ளதால் ஒவ்வொரு விசேஷ நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் கோவிலுக்கு திரளான பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இவ்வாறு வரும் மக்கள் இருசக்கர வாகனங்கள், கார், லாரி பேருந்து போன்ற வாகனங்களில் பள்ளியை கடந்து பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வாகனங்களில் பள்ளி தொடங்கும் நேரத்திலும் மாலை முடியும் நேரத்தில் குழந்தைங்களுக்கு விபத்து ஏற்படும் வகையில் வேகமாக செல்வதாக பள்ளி குழந்தைகள் அங்குள்ள கடை வியாபாரிகள் புகார் தெரிவித்து வந்தனர். இது பற்றி மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து நிலையில் பள்ளி முன்புறம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் மற்றும் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் குறுக்கே பள்ளியின் முன்பு வேகத்தடை அமைத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி