காங்கேயத்தில் மரம்வெட்டி கடத்தல் அரசு அதிகாரிகள் மீது புகார்

74பார்த்தது
வீரணம்பாளையம் சாம்பவலசு சாலையில் மரத்தை சமூகவிரோதிகள் வெட்டி உள்ளதாகவும் புகாரை தொடர்ந்து ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வேர்கள் என்ற தன்னார்வலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கரகோபால்  தலைமையில் காங்கேயம் வட்டாச்சியர் மோகனனிடம் புகார் மனு வழங்கப்பட்டது. அதில் மரம் வெட்டும் பணிகள் 10 நாட்கள் நடைபெற்றதாகவும் வெட்டப்பட்ட மரங்கள் அதே இடத்தில் துண்டுகளாக வெட்டப்பட்டு இரவு பகலாக லாரியில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பட்டதாகவும் தெரிவித்தனர். மரம் வெட்ட வேண்டும் என்றால் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்ட மரம் வெட்டுவதற்கு முறையான ஆதாரம் வழங்கிய பின்னரே வருவாய் துறை அனைத்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து பின்னரே மரம் வெட்ட அனுமதி வழங்கப்படும். அனால்  இங்கோ எந்த அதிகாரிகளிடமும் அனுமதி பெறாமல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டுகின்றனர். மரம் வெட்டுவதற்கு 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போதும் ஒரு அதிகாரிகள் கூட ஊராட்சி மன்ற நிர்வாகிகள், செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மரம் வெட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் மீது துரை ரீதியாக நடவடிக்கையும், வெட்டியவர்களை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி