மின்கம்பம் தோண்டப்பட்ட குழியில் விழுந்த கால்நடைகள்

57பார்த்தது
மின்கம்பம் தோண்டப்பட்ட குழியில் விழுந்த கால்நடைகள்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பச்சாபாளையம் கிராமம் சோழவலசு, கோவில்பாளையம் பகுதியில் மிகப்பெரிய காற்றாலைகள் அமைத்து அதற்கு மின் இணைப்புகள் கொடுப்பதற்கு சாலையோரம் மின்கம்பங்கள் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் மேய்க்கப்படும் கால்நடைகள் அவ்வபோது இந்த குழிகளில் விழுந்து இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே விரைந்து இந்த பணிகளை முடிக்க இப்பகுதி கால்நடை விவசாயிகள் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி