காங்கேயம் அதிமுக ஒன்றிய நகரக கழகம் சார்பில் சென்னிமலை சாலையில் உள்ள என் எஸ் என் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் அன்னூரில் விவசாயிகள் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய கழகச் செயலாளர் என். எஸ். என் நடராஜ், காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் வெங்கு ஜி மணிமாறன், மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மாவட்ட கழகப் பொருளாளர் கே. ஜி. கே. கிஷோ குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் , பூத் கமிட்டி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கழக முன்னோடிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அன்னூர் செல்ல சுமார் 50, 000 பேர் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.