முத்தூரில் பாஜக சார்பில் அண்ணாமலை பிறந்தநாள் விழா

52பார்த்தது
முத்தூரில் பாஜக சார்பில் அண்ணாமலை பிறந்தநாள் விழா
முத்தூரில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வடக்கு ஒன்றிய தலைவர் முத்தூர் அண்ணாமலையார் ஜி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் முத்தூர் ஐ. விசாகன் முன்னிலை வகித்தார். முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரிய நாச்சியம்மன் உடனமர் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. 

தொடர்ந்து பஸ் நிலைய பயணிகள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்றுகள், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய பொதுச்செயலாளர் அஜித்குமார், துணை தலைவர் வி.எஸ்.கே. முருகேஷ், இளைஞரணி தலைவர் மதியரசு, செயலாளர் சக்திவேல், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் சுதாகர், திருமூர்த்தி, கோகுல், வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி