வெள்ளகோவில் வேலம்பாளையத்தில் சக்திவடிவேல்(அதிமுக) வசித்து வருகிறார். 21ம் தேதி சக்திவடிவேலின் உறவினரான மருத்துவர் செந்தில்குமார் முத்தூர் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு தனியார் ஆம்புலன்சில் ஈரோடு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் மொடக்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி மருத்துவர் பலியானார். இதனால் சக்திவடிவேல் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவரிடம் நேரில் சென்று வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை, ஓட்டுனருக்கு உரிமம் இல்லை அந்த வண்டியில் மருத்துவர் செந்தில்குமாரை அனுப்பிவைத்து விபத்து ஏற்பட்டு இறந்ததாகவும் இதனால் குடும்பத்திற்கு இழப்பீடுகள் ஏதும் கிடைக்காது என முறையிட்டு உள்ளார். சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் பின்னர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் (பாஜக நிர்வாகி) பணியாட்களை சக்திவடிவேலு தாக்கியதாக புகார் கொடுத்ததாகவும். அமைச்சர் சாமிநாதன் தூண்டுதலின் சக்திவடிவேல் தகராறில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து நேற்று சக்தி வடிவேலுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கூட்டி சென்றதாக குற்றம்சாட்டுகின்றனர். செய்தித்துறை அமைச்சரின் சகோதரர் தோட்டத்திற்கு அருகில் உள்ளதாகவும் அதனால் இருவருக்கும் இடையே முன்பகை உள்ளதாகவும் அதனால் ஆம்புலன்ஸ் உரிமையாளரும் பாஜக நிர்வாகிக்கு அமைச்சர் உறுதுணையாக செயல்பட்டதாக சக்திவடிவேல் குற்றம் சாட்டுகின்றார்.