கலெக்டரிடம் சர்வ கட்சி குழு மனு

83பார்த்தது
கலெக்டரிடம் சர்வ கட்சி குழு மனு
திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளாகிய இன்று 29. 7. 2024 ஆம் தேதி கணியூர், ஜோத்தம்பட்டி சர்வ கட்சி குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கணியூர் பேரூராட்சி, ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர்களால் ஏற்படுகின்ற சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்று பரவல் குறித்து மனு அளித்தும், கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்திடவும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் டாக்டர்களை நியமித்து, செயல்படுத்த வேண்டியும், கணியூரில் செயல்பட்டு வந்த விவசாய அலுவலகத்தை சீரமைத்தும், உரிய அலுவலர் நியமித்தும், செயல்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்கிடவும், வலியுறுத்தி சர்வ கட்சியின் சார்பாக மனு அழிக்கப்பட்டுள்ளது. மேற்படி மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உரிய துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு செய்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி