காங்கேயத்தில் வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம்

79பார்த்தது
காங்கேயம் நகராட்சி 1வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் நேற்று காலை 9 மணி அளவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் 12 மணி அளவில் பூட்டிய வீட்டில் இருந்து ஓட்டின் வழியாக புகை வந்துள்ளது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக பிரகாசிற்க்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, மரச்சாமான்கள் எரிந்து சேதம் ஆகியது. வீட்டின் மேற்கூறையும் இடிந்து விழுந்து உள்ளது. இந்த தீ விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி