காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனையில் 90 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளது. இப்ப பணிமனையில் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் ஈரோடுட்டில் இருந்து பழனிக்கு காங்கேயம் வழியாக செல்ல அரசு பேருந்து TN 39N 0282 வந்துகொண்டிருந்தது. காங்கேயம் பேருந்து நுழைவாயிலில் செல்ல முயற்சி செய்கையில் பேருந்து பழுதடைந்து நின்றுவிட்டது. பேருந்தை இயக்க ஓட்டுனரும் பலமுறை முயற்சி செய்து பேருந்ததானது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பேருந்தை அப்படி நிறுத்திவிட்டு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் கொடுத்து அங்கிருந்து மெக்கனிக்குகள் வந்த பின்னர் சுமார் 1 மணி நேரம் சரி செய்ய போராடிய பின்னர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உதவியுடன் பேருந்தை தள்ளியே ஸ்டார் செய்ய முடிந்தது. பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. [பின்னர் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
ஈரோடு - பழனி சுமார் 120 கிலோமீட்டர் தூரம் கொண்டது இதில் இயக்கப்படும் பேருந்துகள் 3 மணி நேரம் பயணிக்க கூடியது. மேலும் அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடம் ஆகும். இதில் இயக்கப்படும் பேருந்துகள் சீர் செய்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.