வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இழுப்பை கிணறு பூங்கா நகரில் ஒதுக்குப்புறமான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பைக் முருகன் (வயது 46), குமார் 40, வேல்முருகன் 25, மணிகண்டன் 29, செந்தில் 42, ராஜு 45, துரைமுருகன் 43, சுரேஷ் 57, சந்துரு 25, கனகராஜ் 50, பாபு 44, கிரி 37, தமிழ்ச்செல்வன் 41, சுப்பிரமணி 60 ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்தில் 52 சீட்டுகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.