தாராபுரம்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
தாராபுரம் தாலுக்கா அலுவலக சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள ஆவணங்கள் இருப்பு அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறையினர் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும் தாராபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.