விஜயகாந்த் இரங்கல் பேனர் கிழிப்பு - தாராபுரத்தில் பரபரப்பு

7603பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விஜயகாந்த் அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிமுக ஓபிஎஸ் அணி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ் அவர்கள் சார்பாக இரங்கல் பேனர் தாராபுரம் அண்ணா சிலை அருகில் வைத்திருந்தனர். இந்நிலையில் பேனரை இன்று அகற்ற இருந்த சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் இரங்கல் பேனரை கிழித்து விட்டனர். இதை அறிந்த தொண்டர்கள் அண்ணா சிலை அருகில் ஒன்று கூட பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் தொண்டர்கள் இடையே சமாதானப்படுத்தி பேனரை அகற்றினார். மேலும் புகார் அளிக்கும் பட்சத்தில் பேனரை கிழித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி