தாராபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி!

2621பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு தேமுதிக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேமுதிக தொண்டர்கள் 10பேர் மொட்டை அடித்து அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சிஎஸ்ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் ரோடு உடுமலை ரோடு பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. தேமுதிக. அதிமுக. பாஜக காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ். மதிமுக திராவிட கழகத்தினர் தமிழ் புலி கட்சியினர் மக்கள் நீதி மையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் அணியினர். பாட்டாளி மக்கள் கட்சி. விடுதலை சிறுத்தைகள். கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி