திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடும் விழா நேற்று (ஜனவரி 3) நடைபெற்றது. விழாவானது தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மரக்கன்றுகளை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி என். குணசேகரன், திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி செல்லத்துரை, தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சி. எம். சரவணன், தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான கே. சக்திவேல், தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி. கலைச் செழியன், செயலாளர் எம். ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ். கே. கார்வேந்தன், அரசு வழக்கறிஞர் கே. எம். மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.