திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தின் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்பமையில் 34 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆதிதிராவிடர் அமைச்சர் கயல்விழி வழங்கினார் அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் ச. அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.