ராஜவாய்க்காலில் இடிந்த தடுப்பு சுவர்; நகராட்சி தலைவர் ஆய்வு

70பார்த்தது
ராஜவாய்க்காலில்  இடிந்த தடுப்பு சுவர்; நகராட்சி தலைவர் ஆய்வு
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பூக்கடைக்காரனார் முதல் ஐந்து முக்கு வரை உள்ள சாலையில் பழைய நகராட்சி பள்ளி அருகில் ராஜவாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இது பற்றி அறிந்ததும் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்து அதற்குரிய பணி நடவடிக்கைகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நேற்று முன்தினம்(டிச. 20) ராஜவாய்க்காலில் பொக்லைன் எந்திரம் தூர்வாரும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து நகரமன்ற தலைவர் கூறுகையில் வளையக்காரர் நகராட்சி பள்ளி அருகே பாசனவாய்க்காலில் தடுப்பு சுவர் திடீரென உடைந்து விழுந்தது. இதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாலம் தடுப்பு சுவர் அருகே தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது நகரமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், எஸ். எம். யூசுப், செலின் பிலோமினா, சாஜிதா பானு அகமது பாஷா, தேவி அபிராமி கார்த்திக், ஷீலா மாதவன் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி