தாராபுரம் சென்னியப்பா நகரில் தீ வைப்பு!

5605பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் காலி இடத்தில் குப்பைகளை கொட்டி அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு திணறல். தோல் அலர்ஜி போன்ற உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் புதிதாக வெள்ளை அடித்த கட்டிடங்கள் கருப்பு நிறத்தில் மாறுவதாகவும், அப்பகுதியில் துணி துவைத்து காய வைத்திருந்தால் அதில் புகை கிளம்பிய வாடை அடிப்பதாக அப்பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தாராபுரம் நகராட்சி தலைவர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :