தாராபுரத்தில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

1169பார்த்தது
தாராபுரத்தில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் மதியம் வரை வழக்கம்போல் வெயில் வெளுத்து வாங்கியது. அதைத் தொடர்ந்து வானில் கருமேகங்கள் கூடின. பின்னர் காற்றுடன் இடிமின்னல் தோன்றியது. பலத்த மழை பெய்யும் என எதிர் பார்த்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. தாராபுரம் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில் மழையால் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் தாராபுரம் நகர் பகுதியில் பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா அலங்கியம் சாலை ராம் நகர், சின்னக் கடை வீதி அரசமரம், பெரிய காளியம்மன் கோவில் வீதி , கோட்டைமேடு, உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி