பல்லடம்: ஹாலோ பிளாக் கல் விலை உயர்வு

79பார்த்தது
பல்லடம் ராயர் பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கல்குவாரி மற்றும் கிரஷர் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்ற மூலப்பொருட்களின் விலையை உயர்த்தி வருவதால் ஹாலோ பிளாக் கல் விலையை 5 முதல் 6 ரூபாய் வரை உயர்த்த உள்ளதாகவும் வரும் ஜனவரி 1 தேதி முதல் புதிய விலை உயர்த்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கல்குவாரி, கிரஷர் உற்பத்தியாளர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் கலைஞரின் கனவு இல்லாத திட்டம் பாதிக்கப்படும் எனவும் கட்டுமான தொழில் கடும் நெருக்கடியை சந்திக்கும் எனவும் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் மட்டும் தான் கல்குவாரி, கிரஷர் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக மூலப்பொருட்களின் விலையை உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 1 தேதி முதல் ரூ.38 விற்பனை செய்யப்பட்ட ஹாலோ பிளாக் கல் ரூ.43 விற்பனை செய்யப்படும் எனவும் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கற்கள் 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி