தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (நவம்பர் 16) கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மூலனூர் வட்டாரம் சுகாதாரத் துறை சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவரும் ஆன இல. பத்மநாதன் தலைமை தாங்கினார். மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும் மூலனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு தேவையான சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதில் கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் குமார், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, துணைத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர்கள், இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.