தாராபுரம் : புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய காவல்துறை

84பார்த்தது
தாராபுரம் காவல்துறை சார்பில் புத்தாண்டு வரவேற்கும் விதத்தில் ஒட்டன்சத்திரம்- திருப்பூர் புறவழிச்சாலை தாராபுரம் உடுமலை ரவுண்டானாவில் கேக் வெட்டி 2025 புத்தாண்டு வரவேற்று பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். மேலும் விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். 

தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் விஜய சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர். ரோட்டரி மஹாலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும், ஒலிஒளி அமைப்பு ஏற்பவாறு நடனமாடியும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். 

அதேபோல 5 சாலை சந்திப்பில் உள்ள அருள்ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் இசைக் கச்சேரி நடத்தி கேக் வெட்டிக் கொண்டாடினர். தாராபுரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சரியாக 12 மணிக்கு விளக்குகளை எரிய விட்டு ஸ்ட்ரெட்சரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து வரவேற்றனர். மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் மத்தாப்பு பிடித்து நோயாளிகளுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி