வீடுகளின் மீது விழும் கற்கள் 12 நாட்களாக பொதுமக்கள் அவதி

54பார்த்தது
காங்கேயம் அருகே வீடுகள் மீது விழும் கற்கள். குட்டிச்சாத்தான் வீசுவதாக பொதுமக்களிடையே ஏற்பட்ட அச்சம் காரணமாக அப்பகுதியில் மின்விளக்குகள் பறக்கும் கேமரா மற்றும் கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு வட்டாட்சியர் நேரில் ஆய்வு.

காங்கேயம் அடுத்த ஒட்ட பாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் 7 மணி முதல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து கற்கள் விழுந்த வண்ணம் இருந்தது இதனால் அப்பகுதி பொதுமக்கள் குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக அச்சமடைந்து அருகில் இருந்த கருப்பராயன் கோவிலில் தஞ்சமடைந்தனர். பொதுமக்களின் அச்சம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் அமைத்து கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது மேலும் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட பேதம் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கற்கள் வீசும் நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி