தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனைத்து வார்டுகளுக்கும் ரூ. 1 லட்சம் மதிப்பு குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை செய்ததை தலைமை டாக்டர் சத்தியராஜ் தொடங்கி வைத்தார்.
தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தினசரிசுமார் 300-க்கும் மேற்பட்ட உள் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரிக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வாடுகளுக்கும் பைப் லைனோ மோட்டார் வசதியோ இல்லை.
இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர்வினியோக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரி முதன்மை டாக்டர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து திட்டத்தை அர்ப்பணித்தனர்.
நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை டாக்டர் சத்தியராஜ், செயலாளர்கள் பசுபதி, மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி அறக்கட்டளை பொருளாளர் சிவகுமார், அகரம் சீனிவாசன் ஜி. எம். ஏ. பாபு , பாலச்சந்தர் , விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து உடல் முழு பரிசோதனை முகாம் நடைபெற்றது.