புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் கூட்டு சிறப்பு பிரார்த்தனை!

570பார்த்தது
புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் கூட்டு சிறப்பு பிரார்த்தனை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2024 ஆங்கில புத்தாண்டையொட்டி கொட்டபுள்ளிபாளையம் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி பெத்தேல் ஆலயத்தில் ஆயர்அருல் சாமுவேல் தலைமையில்
தலைமையில் நேற்று இரவு 11. 30 பழைய வருட ஆராதனை நடைபெற்றது.


பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தாராபுரத்தில் சிஎஸ்ஐ மற்றும் அந்தோணியார் ஆகிய
தேவாயலங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் இனிப்புகளை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி