திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பார்க் ரோட்டில் அலுவலகத்துடன் கூடிய வீட்டில் குடியிருப்பவர் வழக்கறிஞர் அண்ணாதுரை 55 தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவராக பொறுப்பில் இருந்த இவரது வீட்டுக்கு சென்னையில் இருந்து வந்த நான்கு பேர் கொண்ட வருமானவரித்துறையினரின் குழுவினர் வழக்கறிஞர் அண்ணாதுரையின் வீட்டுக்குச் சென்று அவரது கடந்த 3 வருட கால பண பரிவர்த்தனை அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள், வங்கி வரவு செலவுகள் குறித்து ஆய்வு செய்து விசாரணை மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்
வருமானவரித்துறையினரின் ஆய்வின்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த அவரது உதவியாளர்கள் அலுவலர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை விசாரணை நடைபெற்றது
இந்நிலையில் வழக்கறிஞர் அண்ணா துரைக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும்
ஆகிய அமைச்சர்களுக்கும் நட்பு இருப்பதாக கூறப்படுகிறது,
அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமி பணத்திலிருந்து வீடு நிலங்கள் வாங்கி விற்பனை செய்யும் வியாபார பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.