தாராபுரம் சாலையில் ஆடுகள் வாகன ஓட்டிகள் அவதி!

68பார்த்தது
தாராபுரம் சாலையில் ஆடுகள் வாகன ஓட்டிகள் அவதி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலக சாலையில் சுற்றி தெரியும் ஆடுகளால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும். மேலும் தாலுகா அலுவலகத்தை பயன்படுத்துவதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதுடன் அருகில் ட்ரெஸ்ஸரி, நீதிமன்றம், பத்திரப்பதிவு , அலுவலகம் அரசு மருத்துவமனை, பொதுப்பணித்துறை, கிராம நிர்வாக அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கக்கூடிய இடத்தில் ஆடுகள் சாலையில் குறுக்கே ஓடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் ஆடு மேய்க்கும் நபர்கள் மீது ஆடுகளின் உரிமையாளர்கள் மீதும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி