தாராபுரத்தில் பைக்கில் புகுந்த பாம்பு மீட்ட தீயணைப்புத்துறை

71பார்த்தது
தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜு இவர் பெரிய கடைவீதியில் உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிடுவதற்காக தனது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பைக்கை உணவகத்தின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களின் கூட்டத்துக்கு நடுவே கொம்பேறி  மூக்கன் பாம்பு ஒன்று சர சர வென புஸ் புஸ் என வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நாலா பக்கம் அலறி அடித்து ஓடினர். அதன் பிறகு திடீரென ராஜு பைக்கில் பாம்பு நுழைந்து கொண்டது. ராஜு சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பைக்கை எடுத்த போது பைக்கின் முன் பகுதியில் தலையை எட்டிப் பார்த்தது அதிர்ந்து போன ராஜு பைக்கை அப்படியே விட்டுவிட்டு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய பொறுப்பு அலுவலர் ராஜா ஜெயசிம்ம ராவ், தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் நுழைந்து கொண்ட பாம்பினை வெளியே எடுக்க முயற்சித்தனர். ஒரு மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தனர். பாம்பு வெளியே வந்தால் கூட்டத்தில் புகுந்து யாரையாவது கடித்து விடும் என்ற நோக்கில் தீயணைப்பு வீரர் பைக்கை தீயணைப்பு நிலையத்திற்கே எடுத்துச் சென்றார். பிறகு போராடி பைக்கின் அடி பாகத்தை கழட்டி அதில் ஒளிந்திருந்த பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி