தாராபுரம் தனியார் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

84பார்த்தது
தாராபுரம் தனியார் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சு. தமிழ்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு ம. கலையரசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போதைப்பொருள்களினால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், மாணவியர்கள் கல்லூரி படிப்போடு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராதல், கல்லூரி காலத்தை தன் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டும் என்பன குறித்து மாணவியர்களிடம் சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் தி. ரவிக்குமார் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி