சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து அகில இந்திய மருத்துவர் சங்கத்தினர் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கான பணியை புறக்கணித்து போராட்டத்தை நடத்தினர். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களான சாவடிப்பாளையம், நத்தக்காடையூர், பாப்பினி, வெள்ளகோவில், தாராபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பொன்னாகரம், தளவாய்பட்டினம், அலங்கியம், ஈஸ்வர செட்டிபாளையம், குண்டடம், குள்ளம்பாளையம், சங்கரன்டாம் பாளையம், தாயம் பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அவசர சிகிச்சை மட்டும் தேவைப்பட்டோருக்கு வழங்கப்பட்டது என்று அகில இந்திய மருத்துவ சங்க தாராபுரம் கிளை தலைவர் டாக்டர் சேகர் கூறினார்.