தாராபுரம் பைக் பஸ் மோதி விபத்து பஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு

85பார்த்தது
தாராபுரம் பைக் பஸ் மோதி விபத்து பஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு
தாராபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸிலும் தீப்பிடித்தது. இதனால் பஸ்ஸிலிருந்து குதித்து 25 பகுதியில் உயிர்த்தபினர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் இவர் மோட்டார் சைக்கிள் திண்டுக்கலில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் திருப்பூர் சாலையில் கோனாபுரம் பிரிவு பகுதியில் அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சரவணன் முந்தி செல்ல முயன்றார் அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் சரவணன் ஒட்டிய பைக் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் உடன் சரவணன் கீழே விழுந்தார். இதற்கிடையில் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் சாலையில் உரசி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் தீப்பிடித்து எரிந்த பைக் மீது படாமல் ஓரமாக ஒட்டிச் சென்றார். இருப்பினும் அரசு பஸ்ஸின் பின்பக்க சக்கரம் தீயில் சிக்கிக் கொண்டது. மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ்ஸின் பின்பக்க டயர் முழுவதும் எரிந்தது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி