தாராபுரத்தில், வீர மங்கை குயிலி நினைவேந்தல் நிகழ்வு குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு ஆதி தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீர மங்கை குயிலி நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதி தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் கூறுகையில்,
தமிழ்நாட்டு ஆளுனர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.
விடுதலை போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ் நாடு அரசு நிதி ஒதிக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். மேலும்
பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை பாதையாத்திரை குறித்த கேள்விக்கு
அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ் நாட்டில்
அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்க கூட ஆள் இல்லை. ஏன் என்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அண்ணாமலையின் பாதையாத்திரையை வண்மையாக கண்டிக்கிறேம். என தெரிவித்தார்.